இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் திருச்செங்கோடு (ஆங்கிலத்தில்:Tiruchengode), ஒரு நகராட்சி ஆகும்.
மக்கள்தொகையில் இதுவே இம்மாவட்டத்தின் பெரிய நகரம் ஆகும்.
இங்குள்ள மலை செந்நிறத்தில் உள்ளதால் இவ்விடம் திருச்செங்கோடு எனப்பெயர் பெற்றது.
வரலாறு:
பழங்காலத்தில் இந்நகர் திருக்கொடிமாடச் சென்குன்றனூர் எனவும்,
திருச்செங்கோட்டாங்குடி எனவும் பெயர் பெற்றது. சம்பந்தரின்
தேவாரப்பாடலிலும் அவ்வாறே கூறப்பட்டுள்ளது
இது கொங்கு நாட்டிலுள்ள ஏழு சிவ தலங்களில் ஒன்றாகும். இது கொங்கு
நாட்டைச்சேர்ந்த கீழ்கரை பூந்துறை நாட்டை சார்ந்தது ஆகும்.
காவிரியின் மேற்குப்புறம் உள்ளது" மேல்கரை பூந்துறை நாடாகும்", காவிரியின் கிழக்குப்புறம் உள்ளது "கீழ்பூந்துறை நாடாகும்".
சிலப்பதிகாரத்தில் இந்நகர் நெடுவேல் குன்று என கூறப்பட்டுள்ளது. மலை மீதுள்ள முருகனை அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடியுள்ளார்.
கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் முதலியவைகளில் இவ்விடம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நகருக்கு தெய்வத்திருமலை, நாகமலை, உரசகிரி, நாககிரி எனப் பல பெயர்களும் உள்ளது.
திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பாடல் "வெந்தவெண் ணீறணிந்து" முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
அதன் முதல் செய்யுள்:
“ வெந்த வெண்ணீறு அணிந்து விரிநூல் திகழ்மார்பில் நல்ல
பந்து அணவும் விரலாள் ஒருபாகம் அமர்ந்து அருளிக்
கொந்து அணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே.”
செந்நிறத்தில் அமைந்த மலையின் உச்சியில் கிழக்கு நோக்கி செங்கோட்டு வேலவர் சன்னதி உள்ளது. மேற்கு நோக்கி அர்த்தநாரீஸ்வரர் எனப்படும் மாதொரு பாகர் சன்னதி அமைந்துள்ளது. மாதொரு பாகர் லிங்க வடிவில் அல்லாமல் 6 அடி முழு திருமேனியுடன் காட்சியளிக்கிறார். பாதி புடவை - பாதி வேட்டி அலங்காரத்துடன் மூலவர் (சிவன்) காட்சி தருகிறார். முழு வடிவமும் வெள்ளைப் பாசாணத்தால் ஆனது.
இம்மலைக்கோயில் சிவனுக்குரியதாக சொல்லப்பட்டாலும் இங்கு திருமாலுக்கும் கோயில் உள்ளது. இங்குள்ள ஆதிகேசவ பெருமாள் சன்னிதி, நம்மாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்டதாகும்.
இம்மலை மீது ஏற 1250 படிக்கட்டுகள் கொண்ட பாதை உள்ளது. தற்போது மலை மீது ஏற சாலை வசதி செய்யப்பட்டுள்ளதால் வாகனங்கள் மூலம் இதனை அடையலாம்.
படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில் பாறையில்
செதுக்கப்பட்டுள்ள நாகர் சன்னிதி மிகவும் பிரசித்தி பெற்றது.
இங்கு முதலில் அமைந்தது முருகனுக்கான கோயில் ஆகும். அதையொட்டியே
இந்நகரின் பெயர் அமைந்துள்ளதை கவனிக்கலாம்.
திருச்செங்கோடு மலைமீதுள்ள மாதொரு பாகர் கோயில் திருச்செங்கோடு ஈரோடிலிருந்து 18 கிமீ தொலைவிலும் சேலத்திலிருந்து 45 கிமீ தொலைவிலும் நாமக்கலிருந்து 32 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
ஈரோட்டையும் ஆத்தூரையும் இணைக்கும் மாநில நெடுஞ்சாலை 79 இதன் வழியாக செல்லுகிறது. திருச்செங்கோட்டையும் நாமக்கலையும் மாநில நெடுஞ்சாலை 94 இணைக்கிறது. பரமத்தியையும் சங்ககிரியையும் இணைக்கும் மாநில நெடுஞ்சாலை 86 இதன் வழியாக செல்லுகிறது.
தொழில்:
திருச்செங்கோடு ஆழ்துளை கிணறு வெட்டும் ரிக் எனப்படும் வண்டிகள் நிறைந்த இடமாகும். ஆழ்துளை கிணறு வெட்டும் வண்டியை சார்ந்த தொழில்கள் இங்கு அதிகம்.
இங்கு விசைத்தறிக் கூடங்கள், சைசிங்க் ஆலைகள், நூற்பு ஆலைகள்,
லாரி கூடு கட்டும் தொழில், விவசாயம் ஆகியவை அதிகளவில் உள்ளன.
அத்தகைய பழமை வாய்ந்த திருசெங்கோட்டில் திருஞான சம்பந்தர் பாடிய
திருநீலகண்டம் பதிகம் - சம்பந்தர் தேவாரம் - திருமுறை 1.116
பதிக வரலாறு :
கொடிமாடச் செங்குன்றூரில் திருஞான சம்பந்தர், அடியார்களுடன் தங்கியிருந்த பொழுது பனிக்காலம் வந்து விட்டது. அப்பொழுது அடியார்கள் நளிர் சுரத்தினால் வருந்தினார்கள்.
(நளிர்தல் - குளிர்தல்; நடுங்குதல்).
(திருஞான சம்பந்தர்) பிள்ளையாரிடம் விண்ணப்பம் செய்து கொண்டனர். 'இந்த நளிர் சுரம் வருதல் இந்நாட்டிற்கு இயல்பாயினும் நமக்கு இந்த நோய்
எய்தப்பெறா. நீலகண்டமே எந்நாளும் அடியார் இடர்தீர்க்கும் அருந்துணை'
என்று எண்ணி 'அவ்வினைக் கிவ்வினை' என்னும் திருப்பதிகத்தைத் தொடங்கி, ஒவ்வொரு திருப்பாடல் இறுதியிலும் 'செய்வினை தீண்டா திருநீல கண்டம்' எனஆணைவைத்து அருளிச்செய்தார்கள். உடனே அடியார்களுக்குமட்டுமன்றி அந்நாட்டிலேயே சுர நோய் தொலைந்தது.
சம்பந்தர் தேவாரம் - திருமுறை
1.116.1)
அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பது முந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
பதம் பிரித்து:
அவ்வினைக்(கு) இவ்வினை ஆம் என்று சொல்லும் அஃ(து) அறிவீர்
உய்வினை நாடா(து) இருப்பதும் உந்தமக்(கு) ஊனம் அன்றே
கைவினை செய்(து) எம் பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம்
செய் வினை வந்(து) எமைத் தீண்டப்பெறா திரு நீலகண்டம்.
கைவினை - கிரியைகளாகிய சிவப்பணி: ஊனம் - குறைவு; குற்றம்;
செய்வினை- வினைத்தொகை - முக்காலத்திய வினைகளையும் சுட்டியது.
உரை:
'நாம் முற்பிறவிகளில் செய்த வினைகளுக்கு ஏற்பவே, இப்பிறவியில் பிராரத்தம் வந்தூட்ட இத்துன்பம் அநுபவிக்கிறோம்' என்று சொல்லப் பெறுவதை நீங்கள் அறிவீர்கள். இவற்றிலிருந்து விடுதிபெறும் வழியை நீவிர் தேடாதிருப்பது உமக்குக் குறையன்றோ? நாம் அனைவரும் சிவபிரானுக்கு அடியவர்கள். அவ்விறைவனை நோக்கிச் சரியை, கிரியை முதலான சிவப்பணிகளைச் செய்து அவ்விறைவன் திருவடியைப் போற்றுவோம். அவ்வாறு செய்யின் நாம் செய்த பழவினைகள் நம்மை
வந்து அணுகா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.
1.116.2)
காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால்
ஏவினை யாலெயின் மூன்றெரித் தீரென் றிருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
பதம் பிரித்து:
காவினை இட்டும் குளம் பல தொட்டும் கனி மனத்தால்
ஏ வினையால் எயில் மூன்(று) எரித்தீர் என்(று) இரு பொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாம் அடியோம்
தீவினை வந்(து) எமைத் தீண்டப் பெறா திரு நீலகண்டம்.
கா - சோலை. தொட்டும் - தோண்டியும். ஏ வினையால் - அம்பின் தொழிலால். எயில் - கோட்டை;
உரை:
சிவனுக்கு அடியவர்கள் ஆன நாம், நந்தவனம் சோலை முதலியவற்றை வளர்த்தும், குளங்கள் பல தோண்டியும், நல்லறங்கள் பலவற்றைச் செய்து, கனிந்த மனத்தோடு 'ஓர் அம்பு எய்து முப்புரங்களை எரித்தவனே' என்று காலை மாலை இருபொழுதும் பூக்களைக் கொய்து வந்து சிவபிரானுடைய மலர்போலும் திருவடிகளை வணங்குவோம். அப்படிச் செய்தால் கொடிய பழவினைகள் நம்மைத் தீண்டமாட்டா. இது
திருநீலகண்டத்தின்மேல் ஆணை.
1.116.3)
முலைத்தட மூழ்கிய போகங் களுமற் றெவையுமெல்லாம்
விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமுந் தண்டு மழுவு மிவையுடையீர்
சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
பதம் பிரித்து:
முலைத்தட[ம்] மூழ்கிய போகங்களு[ம்] மற்(று) எவையும் எல்லாம்விலைத்(து) அலையா வணம் கொண்(டு) எமை ஆண்ட விரி சடையீர்
இலைத் தலைச் சூலமும் தண்டு[ம்] மழுவும் இவை உடையீர்
சிலைத்(து) எமைத் தீவினை தீண்டப் பெறா திரு நீலகண்டம்.
விலைத்தலையாவணம் - விலைத்து அலையா வண்ணம் - அடியேனை விலகச் செய்து அலையா வண்ணம்; விலையாகக் கொண்டு எனலுமாம். விலைத்தலை ஆவணம் செய்து என்றுமாம்.
சிலைத்து - ஒலித்து.
உரை:
"மகளிர் இன்பத்தில் திளைத்து மகிழ்தல் முதலான உலக நுகர்வுகள் எல்லாம்
நம்மை விலையாகக் கொண்டு, அலைக்காதவாறு எம்மை ஆட்கொண்டருளிய விரிந்த சடையை உடையவரே! முவிலை நுனி உடைய சூலம், தண்டாயுதம், மழு முதலிய படைக்கலங்கள் உடையவரே!" (என அடியார்களாகிய நாம் சிவபெருமானைப் போற்றுவோம். அப்படிச்
செய்தால்) பழைய தீவினைகள் ஆரவாரித்து வந்து நம்மைத் தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின்மேல் ஆணை.
1.116.4)
விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும்
புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே
கண்ணிமை யாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
பதம் பிரித்து:
விண்ணுல(கு) ஆள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும்
புண்ணியர் என்(று) இரு போதும் தொழப்படும் புண்ணியரே
கண் இமையாதன மூன்(று) உடையீர் உம் கழல் அடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப் பெறா திரு நீலகண்டம்.
விச்சாதரர் - வித்யாதரர் -பதினெண்கணத்துள் ஒரு சாரார்;
உரை:
"விண்ணுலகை ஆளுகின்ற வித்யாதரர்களும், வேதியர்களும் 'புண்ணிய வடிவமானவர்' என்று காலை மாலை இருபோதும் துதித்துத் தொழும் புண்ணியரே! இமையாத முக்கண்களை உடையவரே! உம் திருவடிகளைப் புகலாக அடைந்தோம்" (என அடியார்களாகிய நாம் சிவபெருமானைப் போற்றுவோம். அப்படிச் செய்தால்) வலிய தீவினைகள் நம்மை வந்து தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.
1.116.5)
மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண் டோளுடையீர்
கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவதுந் தன்மைகொல்லோ
சொற்றுணை வாழ்க்கை துறந்துந் திருவடி யேயடைந்தோம்
செற்றெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
பதம் பிரித்து:
மற்(று) இணை இல்லா மலை திரண்டன்ன திண் தோள் உடையீர்
கிற்(று) எமை ஆட்கொண்டு கேளா(து) ஒழிவதும் தன்மை கொல்லோ
சொல் துணை வாழ்க்கை துறந்(து) உம் திருவடியே அடைந்தோம்
செற்(று) எமைத் தீவினை தீண்டப் பெறா திரு நீலகண்டம்.
மற்று இணை இல்லா - வேறு ஒப்பு இல்லாத; கிற்று - வலிமைகொண்டு; தன்மை - குணம்; பெருமை; சொல் துணை வாழ்க்கை - சொல்லப்படுகிற துணைகள் பலவற்றோடும் கூடிய வாழ்க்கை; செற்று - வருத்தி;
உரை:
"ஒப்பற்ற மலைபோல் திரண்ட திண்மையான தோள்களை உடையவரே! எம்மைப் பெருவலிமை கொண்டு ஆட்கொண்டும் சிறிதேனும் எம் குறையைக் கேட்காமல் இருப்பது உமது பெருமைக்கு ஏற்புடையதாமோ? இல்லற வாழ்க்கைக்குச் சொல்லப்படும் எல்லாத் துணைகளையும் விடுத்து உம் திருவடிகளையே சரணாக அடைந்தோம்" (எனஅடியார்களாகிய நாம் சிவபெருமானைப் போற்றுவோம். அப்படிச் செய்தால்) தீவினைகள் பெருவலிமை கொண்டு வருத்தி நம்மை வந்து அடையமாட்டா. இது
திருநீலகண்டத்தின் மேல் ஆணை.
1.116.6)
மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புறுத்திப்
பிறப்பில் பெருமான் றிருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம்
பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
பதம் பிரித்து:
மறக்கு[ம்] மனத்தினை மாற்றி எம் ஆவியை வற்புறுத்திப்
பிறப்(பு) இல் பெருமான் திருந்தடிக் கீழ்ப் பிழையாத வண்ணம்
பறித்த மலர்கொடு வந்(து) உமை ஏத்தும் பணி அடியோம்
சிறப்(பு) இல் இத் தீவினை தீண்டப் பெறா திரு நீலகண்டம்.
வற்புறுத்துதல் - உறுதிப்படுத்திச் சொல்லுதல்; வலிமைப்படுத்துதல்;
சிறப்பு இல் இத்தீவினை - சிறப்பற்ற இந்தத் தீவினை;
உரை:
நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அவ்விறைவனை நோக்கி
மறக்கும் இயல்பை உடைய நம் மனத்தை மாற்றி மலமறைப்பால் தடுமாறும் உயிரை வற்புறுத்திப் பிறப்பற்ற பெருமானாகிய அச்சிவபெருமானுடைய அழகிய திருவடியின் கீழ் தவறாதவாறு மனத்தை நிறுத்தி அப்பொழுது பறித்த மலர்களைக் கொண்டு பூசித்து "உம்மை ஏத்தும் பணியை உடைய அடியவர் நாங்கள்" எனக் கூறி வழிபட்டுவரின் சிறப்பற்ற தீய பழவினைகள் நம்மைத் தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.
1.116.7)
(இப்பாடல் கிடைக்கப்பெறவில்லை)

1.116.8)
கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே
உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் நாமடியோம்
செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே
திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
பதம் பிரித்து:
கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்(து) உம் கழல் அடிக்கே
உருகி மலர் கொடு வந்(து) உமை ஏத்துதும் நாம் அடியோம்
செரு இல் அரக்கனைச் சீரில் அடர்த்(து) அருள் செய்தவரே
திருவிலித் தீவினை தீண்டப் பெறா திரு நீலகண்டம்.
செரு இல் அரக்கன் - போர் இல்லாத இராவணன்;
திரு இல் இத் தீவினை - சிவஞானச் செல்வத்தை இல்லதாக்கும் தீவினை;
உரை:
"பிறவியை அறுத்து உலக வாழ்க்கையை வெறுத்து உம் கழல் அணிந்த திருவடிக்கே மனம் உருகி மலர்களைக் கொண்டு அருச்சித்து உம்மைப் போற்றுகிறோம். தன்னை எதிர்ப்பார் இல்லாத வலிய இராவணனைப் பலரும் போற்ற அடர்த்துப்பின் அருள் செய்த பெருமானே!" (என அடியார்களாகிய நாம் சிவபெருமானைப் போற்றுவோம். அப்படிச் செய்தால்) சிவனடி வழுத்தும் செல்வத்தைப் போக்கும் இந்தப் பழைய தீவினைகள் நம்மை வந்து தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.
1.116.9)
நாற்ற மலர்மிசை நான்முக னாரணன் வாதுசெய்து
தோற்ற முடைய வடியு முடியுந் தொடர்வரியீர்
தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாமடியோம்
சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
பதம் பிரித்து:
நாற்ற மலர்மிசை நான்முகன் நாரணன் வாது செய்து
தோற்றம் உடைய அடியு[ம்] முடியும் தொடர்(வு) அரியீர்
தோற்றினும் தோற்றும் தொழுது வணங்குதும் நாம் அடியோம்
சீற்றமதாம் வினை தீண்டப் பெறா திரு நீலகண்டம்.
நாற்றம் - மணம்;
தோற்றுதல் - தோன்றுதல் - கட்புலனாதல் (to be visible); அறியப்படுதல்;
தொடர்வு - தொடர்தல்; சீற்றம் - கோபம்;
உரை:
நாம் சிவபிரானுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அப்பெருமானை நோக்கி, "மணங்கமழும் தாமரை மலர்மேல் விளங்கும் நான்முகனும், திருமாலும் தங்களுக்குள் யார் பெரியவர் என வாது செய்தபோது, அவர்கட்கு எதிரே கட்புலனாகத் தோன்றி, அவர்களால் அடியும் முடியும் அறியப்பெறாத தன்மையை உடையவரே!", என்று அழைத்து, நாம் காணத்தோன்றுதலையும் செய்யும் அவ்விறைவனை நாம் தொழுது வணங்குவோம். அவ்வாறு வழிபடின், சினந்துவரும் பழவினைகள் நம்மைத் தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின்மேல் ஆணை.
1.116.10)
சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி யுடையொழிந்தும்
பாக்கிய மின்றி யிருதலைப் போகமும் பற்றும்விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
பதம் பிரித்து:
சாக்கியப் பட்டும் சமண் உரு ஆகி உடை ஒழிந்தும்
பாக்கியம் இன்றி இருதலைப் போகமும் பற்றும் விட்டார்
பூக் கமழ் கொன்றைப் புரிசடையீர் அடி போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப் பெறா திரு நீலகண்டம்.
சாக்கியம் - புத்தமதம் (Buddhism, as founded by Šākya-muni)
சமண் - அருகமதம் (Jainism); அம்மணம் (nudity);
இருதலைப் போகம் - இம்மை மறுமை இன்பம்.
கொன்றை - Indian Laburnum tree;
புரிசடை - திரண்டு சுருண்ட சடை (tangled, matted locks);
தீக்குழித் தீவினை - தீக்குழியினைப் போலக் கனலுவதாகிய தீவினை;
உரை:
சிலர் புத்த மதத்தைச் சார்ந்தும், சமண சமயத்தைச் சார்ந்து ஆடையின்றித்
திரிந்தும் சிவபிரானை வணங்கும் பாக்கியமின்றி இம்மை மறுமை இன்பங்களையும் அவற்றைப் பெறும் பற்றையும் விட்டுப் பயனற்றவராயினர். நாம் சிவபிரானுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? நாம் அவ்விறைவனை நோக்கிக் "கொன்றை மலர் மணக்கும் சடையை உடையவரே! உம் திருவடிகளைப் போற்றுகின்றோம்" எனக் கூறிச் செயற்படின் தீக்குழி போலக் கனலும் பழைய தீவினைகள் நம்மைத் தீண்ட மாட்டா.
இது திருநீலகண்டத்தின்மேல் ஆணை.
1.116.11)
பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான்
இறந்த பிறவியுண் டாகி லிமையவர் கோனடிக்கண்
திறம்பயின் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார்
நிறைந்த வுலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே.
பதம் பிரித்து:
பிறந்த பிறவியில் பேணி எம் செல்வன் கழல் அடைவான்
இறந்த பிறவி உண்(டு) ஆகில் இமையவர் கோன் அடிக்கண்
திறம் பயில் ஞான சம்பந்தன செந்தமிழ் பத்தும் வல்லார்
நிறைந்த உலகினில் வானவர் கோனொடும் கூடுவரே.
திறம் - இயல்பு; மேன்மை;
பயில்தல் - தங்குதல் (to stay, abide,); தேர்ச்சியடைதல்; கற்றல்; சொல்லுதல்;
உரை:
இப்பிறவியிலேயே சிவபிரான் திருவடிகளை அடைய விரும்பி வழிபட்டு, மீண்டும் பழவினைகளால் பிறப்பு உண்டு என்றால், தேவர்களின் தலைவனாகிய சிவபிரான் திருவடிகளின் பெருமைகளை அறிந்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகச் செந்தமிழ்ப் பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர்களாயின், அவர்கள் தேவர்கள் நிறைந்த வானுலகில் அவ்வானவர் கோனோடு கூடி இருக்கும் நிலையைப் பெற்று இன்புறுவர்.
அன்புடன்,
R.வஜ்ஜிரவேலு