ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவைப் பழமாக சேர்ந்தே நடந்தது அழகாக
நேற்றைய பொழுது கண்ணோடு இன்றைய பொழுது கையோடு
நாளைய பொழுதும் உன்னோடு நிழலாய் நடப்பேன் பின்னோடு
ஊருக்குத் துணையாய் நானிருக்க
எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன்
உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற
மைவிழிக் கிண்ணத்தில் நெய் வார்த்தேன்
முன்னொரு பிறவி எடுத்திருந்தேன்
உன்னிடம் மனதைக் கொடுத்திருந்தேன்
பெண்னொரு பிறவி எடுத்து வந்தேன்
பேசிய படியேக் கொடுக்க வந்தேன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
இயற்றியவர்: கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
படம் : காக்கும் கரங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக