அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள்.
அதிமதுரம் என்று ஒன்று இருப்பது நிறைய பேருக்கு தெரியாது. ஆனால் அதில்
இருக்கும் இயற்க்கையின் வரம் ஏறாலம். இனி அதை பற்றி பார்ப்போம்.
அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ
குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும்
பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே
அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும்
வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது.
*
இவை ஸ்பெயின், துருக்கி, சிரியா, ஈரான் நாடுகளிலும் விளைகிறது. வெண்
திட்டுகள், வெண்குட்டம் கண்ட இடத்தில் பூசி ஊற வைத்துக் குளித்து வர
வெண்மை மாறி வரும். அதிமதுரத்தை தொடர்ந்தும், அதிகமாகவும் உண்ண உடல் எடை கூடும்.
ரஷ்யாவிலும், சீனாவிலும் இது விளைகிறது. 24 அடி
உயரம் வரை உயர்ந்து வளரும் செடி அதிமதுரம், வேர் வெட்ட வெட்ட அழியாது. பல
வருடங்கள் கழித்தும் வெட்டிய வேர் துளிர்க்கும். பல நோய்களை அழிக்கும்
ஆற்றலைப் பெற்றிருக்கிறது. அதிமதுரம் இனிப்பு சுவையுள்ள வேர். ஸ்பெயினில் நன்கு வளரும்.
*
சுருட்டுப் பருமனில் ஏறத்தாழ அதே நீளத்தில் குச்சி, குச்சியாக சிவப்புச்
சாயலுடன் அதிமதுரம் இருக்கும். இதில் ஹைட்ரோ கார்டிகோன் என்ற ஒரு
பொருள் இருக்கிறது. நச்சுக் குணம் சிறிதும் இம் மூலிகையில் இல்லை.
கொழுப்புப் பொருட்களை நன்கு ஜீரணிக்க உதவும் பண்பு இதற்கு உண்டு.
*
அதிமதுரம் என்றால் அதிக இனிப்புள்ளது என்று பொருள். இதன் வேர்ப்பகுதி
தான் அதிமதுரம். இதை வடமொழியில் யஷ்டிமது என்றழைப்பர். இது இமயமலை அடிவாரத்தில் ஏராளமாக வளர்கிறது.
*
பண்டைய காலத்தில் எகிப்து, சீனம், கிரேக்கம் போன்ற நாடுகளில்
புகையிலைகளுடன் அதிமதுரம் சேர்த்து புகைக்கும் பழக்கம் இருந்துள்ளது.
இதனால் புகையினால் ஏற்படும் தீமைகள் தவிர்க்கப்பட்டது.
அதிமதுரத்திலிருந்து எடுக்கப்படும் சத்தானது கரும்பின் சர்க்கரையை விட
ஐந்து மடங்கு இனிப்பு கொண்டதாகும்.
அதிமதுரத்தின் பயன்கள்:
*
1. அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில்
செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில்
நிகரற்ற முறையில் செயல்படுகிறது.
*
2. ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு
மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும்.
கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.
*
3. தோல் நோய்கள், கண்நோய்கள், சளி, சரும அலர்ஜி குணமாகும். வேற்று
மருந்துகளுடன் கூட்டியும், சூரணம், கஷாய ரூபத்தில், தனியாகவும்
உபயோகித்து நோய்களிலிருந்து நன்மை பெறலாம்.
*
4. அதிமதுரத்தைத் தூளாக்கி பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்து
மயிர்க்கால்களில் ( தலை மண்டை ) அழுத்தித் தேய்த்து அப்படியே 2 மணி
நேரங்கழித்துக் குளிக்க தலைமயிரின் ( தலைமுடி ) குறைகள் நீங்கும்.
*
5. தலையிலுள்ள சிறு புண்கள் குணமாகும். கேசம் பட்டு போல்
மினுமினுப்பாகவும் அகால நரையும் நீங்கும்.
7. நெல்லி முள்ளியுடன், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்துச் சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து
வரலாம். கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு.
கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும். இளநரை நீங்கும்.
*
8. அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து
நெய்யில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும். கண் ஒளி பெறும்.
இருமல், வயிற்றுப்புண், பசியின்மை, சுவையின்மை, சிறுநீர் கழிக்கும் போது
எரிச்சல் நீங்கும்.
10. அதிமதுரத்துடன் சமஅளவு தோல் சீவிய சுக்கு சேர்த்து தூளாக்கி காலை,
மாலை உணவுக்குப் பிறகு கால் டீஸ்பூன் தேனில் குழைத்து சிறிது சிறிதாக
சுவைத்து உண்ண தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போகும்.
*
11. அதிமதுர இலையை அரைத்துப் பூசிவர உடலிலும், அக்குளிலும் உண்டாகும்
கற்றாழை நாற்றம், அரையில் உண்டாகும் சொறி, சிரங்கு போகும்.
*
12. அதிமதுரத் துண்டு ஒன்றை வாயிலிட்டுச் சுவைத்து விழுங்க இருமல்
தணியும். அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம், கொடி வேலி
வேர்ப்பட்டை 17 கிராம் இலைகளைச் சூரணம் செய்து சித்திரை முதல் ஆடி வரை
சாப்பிட்டுவர நோயணுகாது. தலைவலி, ஒற்றைத் தலைவலி, தீராத்தலைவலி,
காய்ச்சல் தீரும். கண்கள் ஒளி பெறும்.
*
13. அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து
இளவறுப்பாய் வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில்
தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல்
தீரும்.
*
14. அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20
கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100
மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள்
சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள
காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிவர்த்தி செய்து விடலாம்.
*
15. அதிமதுரம், சங்கம் வேர்ப்பட்டை சமமாக எடுத்துப் பொடி செய்து
எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேற்றாங்கொட்டை அளவு மாத்திரை செய்து
உலர்த்தி வைத்துக் கொண்டு, பசும்பாலில் மூன்று தினங்கள் சாப்பிட்டால்,
மஞ்சள் காமாலை நிவர்த்தியாகும். புளியில்லா பத்தியம் இருக்க வேண்டும்.
சுகப் பிரசவத்திற்கு...
அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு
வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை
கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.
*
16. அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு 1_2 கிராம் அளவில்
தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு,
இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண் தன்மை
பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும்.
*
17. பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும்.
ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.
*
18. அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து
இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 4_6 கிராம்
பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல
விருத்தியாகும்.
*
19. சோம்புச்சூரணம், அதிமதுரச் சூரணம் தலா 5 கிராம் அளவில் இரவு
படுக்கும்போது சாப்பிட்டு சுடு தண்ணீர் சாப்பிட்டால், இலகுவாக மல
விருத்தியாகும். உள் உறுப்புக்கள் சூடுதணிந்து, சுறுசுறுப்பாக உடல்
இயங்கச் செய்யும்.
*
20. அதிமதுரச் சூரணம் கலப்படம் இல்லாத சந்தனச் சூரணம் வகைக்கு அரை கிராம்
எடுத்து பாலில் கலந்து 3_4 வேளை சாப்பிட்டால், வாந்தியுடன் இரத்தம்
வருதல் நிற்கும்... உடலில் உள் உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.
*
21. போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச்
சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு
வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக்
கூடுதலாக ஊட்டச்சத்து .
*
22. அதிமதுரம், வாதுமைப் பிசின், வேலம் பிசின் சமமாக வகைக்கு 10 கிராம்
அளவில் சேகரித்து வைத்துக் கொண்டு, 250 கிராம் சர்க்கரையைத் தண்ணீர்
சிறிதளவு விட்டு பாகு பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும். தேன் பதம்
வரும்போது மேற்கண்ட சூரணங்களைக் கொட்டிக் கிண்டி லேகியம் தயாரித்து
வைத்துக் கொண்டு, இரண்டு தேக்கரண்டியளவு மூன்று முறை சாப்பிட்டால்,
வரட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.
*
23. அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம்
அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம் ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்ணீரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும்
வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த
நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல்
பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.
*
24. அதிமதுரம், வால்மிளகு, சித்தரத்தை, திப்பிலி ஆகியவை வகைக்கு 5 கிராம்
எடுத்து சன்னமாகப் பொடித்து 250 மில்லி கொதிக்கும் நீரில் போட்டு மூடி 30
நிமிஷங்கள் சென்றபின் வடிகட்டி காலை, மாலை இருவேளை 30 மில்லி வீதம்
சாப்பிட்டால் இருமல் தீரும்..அதிமதுரம் 15 கிராம், சீரகம் 15 கிராம்,
வெங்காயம் 20 கிராம், சங்கம் வேர்ப்பட்டை 15 கிராம் இவைகளை பசும்பால்
தெளித்து நன்றாக அரைத்து காலை வேளையில் மூன்று தினங்கள் மட்டும்
சாப்பிட்டால் மஞ்சள் காமாலை தீரும். மூன்று தினங்களுக்கும் ஆகாரத்தில்
உப்பு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும்.
*
25. அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச்
சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும்.
போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த
மூலிகையாகும்.
*
26. அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50_100
கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய்
தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான
பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2_3 மாதங்கள்
சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
*
27. அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால்
விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள் நிவர்த்தியாகும்.
*
28. அதிமதுரம், சோம்பு, சர்க்கரை இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து,
தனித்தனியாக நன்கு சூரணம் செய்து, பின் ஒன்று கூட்டி வைத்துக் கொண்டு
தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலி
நீங்கும்.
இதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் தலைவலி, தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி தீரும். அதிமதுரம், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவைகளை சம எடையாக எடுத்துச் சூரணம் செய்து அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சீதளத்தால் ஏற்பட்ட தலைவலி தீரும். இதே சூரணத்தை நெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.
*
29. அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால்
தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்... தொண்டையில்
உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.
*
30. பொதுப்பிரயோகமாக அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தலாம். சளி, இருமல் இருக்காது. தொண்டை சம்பந்தப்பட்ட தொல்லைகளும் நீங்கிவிடும்.
அதிமதுரத்தில் இவ்வளவு சங்கதி இருக்கு, இனி தேடி பார்த்துனாலும்
வாங்கிடுவிங்க இல்லையா. உடலுக்கு நல்லது என்றால் எவ்வளவு வேண்டுமாலும் தேடிப் போகலாம் ( தகவல் அறிய ), வாங்கி பயன்படுத்தலாம்.
திருச்சிற்றம்பலம்.
R .வஜ்ஜிரவேலு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக