வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர் ஆழி நீங்குகவே என்று.

(முதல் திருவந்தாதி - 1)
பொய்கை ஆழ்வார் சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள திருவெஃகா திருத்தலத்தில்,
பொற்றாமரைக் குளத்திலே தாமரைப் பூவில் அவதாரம் செய்தார். ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரம். திருமாலின் பாஞ்சசன்னிய அம்சமாகத் தோன்றியவர்.
இவர் அருளியுள்ள பிரபந்தம் "முதல் திருவந்தாதி" என்று அழைக்கப்படுகிறது. அந்தாதி அமைப்பில் 100 பாசுரங்கள் கொண்ட இந்த பிரபந்தத்தில்,
திருவரங்கம், திருவிண்ணகர், திருக்கோவலூர், திருவெஃகா, திருவேங்கடம்,
திருப்பாற்கடல், பரமபதம் முதலிய திவ்ய தேசங்கள் குறித்து பாடியுள்ளார்.
அதில் அரங்கனைக் குறித்து பாடியுள்ள பாசுரம்.
நம்பெருமாள் அரங்கனாதனுக்கு பல ஆழ்வார்களும் பாசுரங்களைப் பாடியுள்ளார்கள். நாலாயிரமும் அரங்கனுக்கே என்று சொல்பவர்களும் உண்டு.
பத்து ஆழ்வார்கள் மொத்தம் 247 பாசுரங்கள் பாடியுள்ளார்கள். அவருக்கு
புறப்பாடு நடக்கும் போது பெருமாளுக்கு ”பதின்மர் பாடும் பெருமாள்” என்று
அருளப்பாடு செய்வார்கள், அதில் முதல் ஆழ்வார் பொய்கை ஆழ்வார், தன் முதல் திருவந்தாதியில் ஒரு பாசுரமும், கடைசி ஆழ்வாரான திருமங்கை ஆழ்வார் 73 பாசுரமும் பாடியுள்ளார்கள்.
பிர்ஹலாதன் தன் தாயாரின் கர்ப்பத்தில் இருக்கும் போதே பெருமானைப் பற்றி, நாரதர் சொல்ல கதை கேட்டு, வளர்ந்தான். பெருமானைப் பார்த்து கை தொழுதான். பின்னாளில் வேதாப்பியாசத்தின் போது, தன் சக மாணவர்களிடத்தில் ”ஒம் நமோ நாராயணாய’ என்று சொல்லுங்கள்,
ஹிரண்யாய நம” என்று சொல்லாதீர்கள் என்று சொல்கிறான்.
”நீ மட்டும் அப்படிச் சொல்ல எப்படிக் கற்றுக் கொண்டாய்?” என்று சக மாணவர்கள் கேட்க, “நான் என் தாயாரில் கர்ப்பத்தில் இருக்கும் போதே அதைக் கற்றுக் கொண்டு விட்டேன்” என பதில் அளிக்கிறான் பிர்ஹலாதன்.
அதைப் போல,கர்ப்ப காலத்திலேயே பெருமானைக் கண்டேன் என்கிறார் இந்த ஆழ்வார். இதில் வேடிக்கை என்னவென்றால் பொய்கை ஆழ்வார் ஒரு தாயாரின் கர்ப்ப சம்பந்தம் இல்லாமல் வந்தவர்.
தொண்டரடிப்பொடி ஆழ்வார், தன்னுடைய பாசுரத்தில்,
"வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவ ரேலும்
பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு
பேதைபா லகன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகரு ளானே."
ஒருவன் நூறு வருஷங்கள் வாழ்வதாகக் கொண்டால், அதில் பாதி காலம் தூக்கத்திலேயே போய் விடும், மீதி பாதியில் பேதை, பாலகன், அதாகம், பிணி, பசி, மூப்பு, துன்பம் எனப் போய்விடும். அதனால் எனக்குப் பிறவி வேண்டாம் என்று அரஙகனிடம் மன்றாடுகிரார்.
அதுக்காக பெருமான் நம்மை விட்டு விடுவானா?
நாம் முன்பிறவியில் செய்த கர்மத்தைத் தொலைத்தால் தானே பிறவி இல்லாமல் இருக்க முடியும்?
அப்படி கர்ப்பத்தில் இருக்கும் போதே கண்டேன் என்கிறார் பொய்கையாழ்வார்.
கர்ப்பத்திலேயே இல்லாதவர், கர்ப்ப காலம் என்பது எவ்வளவு கஷ்டம் என்பதை உணர்ந்து இருக்கிறார் பாருங்கள்.
ஒரு தாயாரின் கர்ப்பத்தில் இருப்பது ஒரு வகையில் ந்ல்லதுதான், ஏனெனில்
வெளியில் வந்தால் எத்தனை சிரமங்கள்? அத்தனையும் மீறி நாம் எப்போது இறைவனை அடைவது?
ஆனால் உண்மையிலேயே கர்ப்ப காலமே மிகக் கஷ்டம் என்று ஆழ்வார் உணர்ந்துள்ளார். பின்னெ இல்லையா, நாம நம்ம இஷ்டம் போல அங்க உட்காரமுடியுமா, காலைத்தான் நம்ம இஷ்டத்துக்கு நீட்ட முடியுமா, நமக்கு வேண்டியதை நாம சாப்பிட முடியுமா, புழு, பூச்சி, மலம், சீழ் இவைகளுக்கு இடையே மடிச்ச காலை நீட்ட முடியுமா, இப்படி பல முடியுமாக்களை சிந்தித்து இருப்பார் போல் ஆழ்வார். அது மட்டுமா வெளியில் வந்தால் மட்டும் உடனே நாம நம் வேலையைச் செய்து கொள்ளமுடியுமா? இதையெல்லாம் ஆழ்வார் சிந்தித்து இருப்பார் போல். இதையெல்லாம் எப்படி என்னால் மறக்கமுடியும். அதைத்தான் சொல்கிறார், ‘ஒன்றும் மறந்தறியேன்” என்று.
திருபாணாழ்வாரைப் போய் கேட்டால் தெரியும், அரங்கனுடைய ஒவ்வொறு அங்கங்களும் எவ்வாறு அவரை பாதித்ததென்று?
”திருக்கமலப் பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே” என்கிறார்
அவருடைய பாதத்தை பற்றிப் பாடும் பொது.
“செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே” என்கிறார் வாயைப் பற்றிப் பாடும் போது.
“என்னை பேதமை செய்தனவே”, அந்த
“நீண்டவப் பெரிய வாய கண்கள்” என்கிறார் கண்கள் செய்ததை!.
எல்லாவற்றுக்கும் மேலாக, “என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் கானாவே!” என்று அரங்கனோடு ஐக்கியம் ஆகி விடுகிறார்.
அப்படிப்பட்ட அரங்கனை பொய்கை ஆழ்வாரால் மட்டும், ”எப்படி மறக்க முடியும் அவனை” என்கிறார்?
அதனால்தான் அங்கிருந்தபடியே பெருமானை கண்டாராம். எந்தப் பெருமானைக் கண்டாராம்?
“ஓதநீர்வண்ணனை” என்கிறார். எந்தப் பெருமான் என்னை ரக்ஷிப்பதற்கென்று, வைகுந்தத்தில் இருந்து விரக்தி ஏற்பட்டு, அரங்கத்தில் வந்து படுத்து இருக்கிறானோ, கர்ப்பத்திலேயே தொழுது கொண்டு இருக்கும் என்னை போன்றவர்களை காப்பதற்க்கு வந்திருக்கும் அரஙகனைக்
கண்டாராம். நானோ கர்ப்பத்தில் படுத்துள்ளேன், அவனோ அரஙகத்தில் படுத்துள்ளான்.
மேகத்தைப் போல எல்லாருக்கும் அருள் செய்வதற்க்கு என்று வந்து படுத்து
இருக்கும் அரங்கணை எப்படி மறப்பேன் என்று “ஒதநீர் வண்ணனை” என்கிறார். “கண்டேன்” என்கிறார், உடனேயே, “கை தொழுதேன்”, என்கிறார். எந்த திசையை நோக்கித் தொழுதாராம்? “திருவரங்கமேயான் திசை” என்கிறார். அதாவது திருவரங்கன் இருக்கும் திசையை நோக்கித் தொழுதேன் என்கிறார்.
கருவரங்கத்திலேயே அவனை தொழுங்கள், அப்படி இல்லையா நினைவு தெரிந்த பிறகாவது திருவரங்கத்தில் அவனை தொழுங்கள், அவனை மறக்காதீர்கள், அவன் அருள் கிடைக்காத “ஏழைகாள்” என்று நம்மைப் பார்த்துக் கூறுகிறார்.
பொய்கை ஆழ்வார் பாசுரம்:
ஒன்றும் மறந்தறியேன்* ஓதநீர்வண்ணனைநான்*
இன்றுமறப்பனோ ஏழைகாள்* -அன்று
கருவரங்கத்துள் கிடந்து* கைதொழுதேன் கணடேன்*
திருவரங்கமேயான் திசை (1) 2087
ஆழ்வார் திருவடிகளே சரணம் !
பக்தியுடன்
R. வஜ்ஜிரவேலு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக