வியாழன், 22 ஜூலை, 2021

பணம் காய்க்கும் மரம்....

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிறு பையன் ஒருவன் தெளிவாகவே கேட்கிறான் "அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஏன் அவர்களின் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்ப்பதில்லை" என்று...

ஆனால், அந்த நிகழ்ச்சியின் நெறியாளர் அபத்தமாக, பொய், புரட்டு பதில்களைச் சொல்லி, அவன் வாயை அடக்குகிறார்.

இதுவா நேர்மை, இதுவா இதற்கு சரியான பதில் என்று எவரும் கேள்வி கேட்கவில்லை.

ஏனெனில் அப்படி கேள்வி கேட்டால் நம்மை அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து நீக்கி விடுவார்கள் அல்லது நாம் ஒருசில வினாடிகள் திரையில் தோன்றும் பாக்கியத்தைப் பறித்து விடுவார்கள், என்று அந்த பார்வையாளர்கள் எல்லோரும் வெட்கமே இல்லாமல் அந்த நெறியாளருக்கு கை தட்டுகிறார்கள்.

உண்மையில் எத்தனை அரசு ஆசிரியர்களும், ஆசிரியைகளும் முழுமையான அர்ப்பணிப்போடு பள்ளியில் பாடம் நடத்துகிறார்கள்.....

அக்கறையுடன் பாடம் நடத்துவது என்பது, கடந்த நாற்பது வருஷங்களில், காணாமல் போன ஒன்று....

இதை எந்தப் பட்டிமன்றமும், விவாத மேடையும் மறுக்க இயலாது.

இன்று, கல்வி ஒரு வியாபாரம்!..

அதில், ஆசிரியர் ஒரு வியாபாரி!..

கல்வி என்பது மனிதனை நெறிப் படுத்துவதாக, நேர்மை படுத்துவதாக, பண் படுத்துவதாக இருந்தவரை அது ஒரு தெய்வீகத் தன்மையுடன் இருந்தது.

ஆனால் கடந்த முப்பது, நாற்பது ஆண்டுகளில் கல்வி என்பது, பண்பை ஊட்டுவதற்குப் பதில், பணிவைப் போதிப்பதற்கு பதில், உண்மையை உணர்த்துவதற்கு பதில், வெறும் போலியான, தகவல் குப்பைகளையும், அறிவியல் கூறுகளையும் மட்டுமே பிரதிபலிக்கும் ஒன்றாக மாறியதன் காரணமாக, இன்றைய மாணவர்களில் பலர் பண் படுத்தப்படுவதில்லை! மாறாக, பயன் படுத்தப்படுகிறார்கள்.

அரசு ஆசிரியர்கள் வாங்குகின்ற சம்பளத்திற்கு, அவர்கள் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் உழைத்தாலும், போதாது.

நம்முடைய மாணவர்களை சுயசிந்தனை உடையவர்களாகவும், நம்முடைய பாரதத்தின் பாரம்பரியத்தை அறிந்தவர்களாகவும், நேர்மையான வழிமுறைகளை கடைப்பிடிப்பவர்களாகவும், நியாயமான குணம் படைத்தவர்களாகவும், உண்மையாக உழைக்கும் மனமுள்ளவர்களாகவும் உருவாக்கக்கூடிய அர்ப்பணிப்பும், கடமையும் இன்று ஆசிரியர்களிடம் எந்த அளவுக்கு உள்ளது என்பது கேள்விக்குறி தான்.

பெரும்பாலான ஆசிரியர்கள் தங்கள் பணியை பணம் காய்ச்சி மரமாக மாற்றி, தங்கள் குடும்ப நலன், சந்ததி நலன் பெருக்கி வாழ்தல் ஒன்றே, வாழ்க்கை என்று, வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் அரசுப் பள்ளிகளின் தரம் இருக்கும் போது, எந்த அரசு பள்ளி ஆசிரியர், தன் பிள்ளையை தெரிந்தே, இன்னொரு அரசுப் பள்ளி ஆசிரியரை நம்பி ஒப்படைப்பார்.....

இதுதான் உண்மைக் காரணம்.

வேறு எந்த பொய் விளக்கங்களாலும், மாய்மால வார்த்தைகளாலும், சொற்ச் சிலம்பங்களாலும், உண்மையை மறைக்க இயலாது.

இன்று 'மாதா-பிதா-குரு-தெய்வம்' அனைத்தும், தோல்வியடைந்த ஒரு தத்துவம் ஆகிவிட்டது.

இந்நிலை மாற்றப்பட வேண்டும்.

பெற்ற பிள்ளைகளுக்கு பல நூறு நீதிக்கதைகள் சொல்லி வளர்த்த  பெற்றோர்களைப் பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது.

இன்றோ நீதிக்கதைகள் சொல்லி வளர்க்கும் தாய்மார்கள் ஒரு சிலரே.

அதேபோல் தான் நீதிக்கதைகள் சொல்லி பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கும் பஞ்சம் ஆகிவிட்டது, மாறாக ம(ன)த மாற்றங்களை நன்றாக செய்கின்றனர்.

பண வேட்டை யோடு மாணவ மாணவிகளைக் கெடுக்கும் சில ஆசிரியர்களையும் பார்த்து விட்டோம்.

இவை அனைத்தையும் உலகில் ஆட விட்டு, வெறும் கல்லாய் மட்டும் மாறிவிட்ட கடவுள்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

கலி தோஷம்!.. சர்வ நாசம்!..

செவ்வாய், 13 ஜூலை, 2021

தூங்காதே தம்பி தூங்காதே

 பிஜேபி கடந்த ஐந்து வருடங்களாக தெருமுனைக் கூட்டங்களைக் கூட்டி, மக்களுக்கு தங்கள் கருத்துக்களை, தங்கள் சாதனைகளைக் கொண்டு சென்று இருந்தாலே, இன்று பிஜேபி யின் வசம் குறைந்தது, 20 MLA சீட்டுக்கள் இருந்திருக்கும்!


ஆனால், பாஜக நிர்வாகிகள், தலைவர்கள் அனைவரும் இன்று வரை தங்கள் தவறுகளிலிருந்து எந்த பாடத்தையும் கற்றதாகத் தெரியவில்லை!


பணத்துக்காகவும், பதவிக்காகவும், அரசியலைப் பயன்படுத்தும் இழிவான நிலை, தமிழகத்தின் சாபக்கேடு!


இதில் தமிழக பாஜக விதி விலக்காக இருக்க வேண்டும்.


குளிர்சாதன அறைக்குள் அமர்ந்து கொண்டு, தமிழகத்தில் பாஜக கட்சியை வளர்க்க நினைத்தால், அது இன்னும் நூறு வருஷம் கடந்தாலும் வளரப் போவதில்லை!


இன்று பாஜகவுக்கு இருக்கும் நான்கு எம்எல்ஏக்கள் கூட, தேர்வானதற்கான அடிப்படைக் காரணம், பாஜக கட்சியின் உழைப்பு அல்ல....


பொதுமக்களில் இந்து மதத்தின் மேல், இந்துப் பண்பாட்டின் மேல் அக்கறை கொண்ட ஆயிரமாயிரம் ஆன்மாக்கள் இரவு பகல் பாராது, முகநூல் மற்றும் வாட்ஸ் அப் மூலம், பல்வேறு உண்மைக் கருத்துகளை, மக்களிடையே கொண்டு சென்று சேர்த்த காரணத்தினால் மட்டுமே!...


H.ராஜா, அர்ஜுன் சம்பத் போன்ற, உணர்வு பூர்வமான நல்ல தலைவர்களை, நன்கு பயன் படுத்தாமல், தமிழக பாஜக வீணாய்ப் போன, விளங்காத ஒன்றாய், மாறியது ஏன்.....


நாட்டுப் பற்றும், இந்து மதப் பற்றும் கொண்ட இளைஞர்கள், ஊருக்கு நூறு பேரைத் தேர்வு செய்து, தெரு முனைக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்தினால் மட்டுமே, பாஜக தமிழகத்தில் வளரும்!..


இல்லை என்றால், கடைசிவரை சவலைப் பிள்ளையாக இன்று இருக்கும் நிலை தான் தொடரும்!..

ஞாயிறு, 27 ஜூன், 2021

தமிழ்நாடு ஒரு மாநிலம்

 

இங்கே சில பேருக்கு தமிழ்நாடு ஒரு மாநிலமா இல்லை நாடா என்று கூட தெரியாமல் வாதம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
 
பாரதத்தின் ஒரு மாநிலமாக இருக்கும் தமிழகம் தமிழ் நாடு என்றிருப்பதால் அது ஒரு நாடாக கருதிக் கொள்கிறார்கள்.
 
ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேச
ம், உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான் போன்றவை எப்படி பிரதேசம், ஸ்தான் என்று பகுதிகளை குறிக்கிறதோ அப்படியே தமிழ் 'நாடு'
என்ற சொல்லும் பகுதியையே குறிக்கும்.
 
இந்த சொல்லின் உண்மைப் பொருளை விளங்கிக்கொள்ளாததால் தான் இவ்வாறு குறுகிய மனப்பான்மையோடு பேசுகிறார்கள்.
 
 
 
 
சேரர், சோழர், பாண்டியர், பல்லவர் பேரரசு காலத்திலும் அவர்களின் நாட்டில் பல மண்டலங்களாகப் பிரித்து 'நாடு' என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டுள்ளது.
 
(உதாரணமாக தொண்டை மண்டலம் அல்லது தொண்டை நாடு)
நல்லவேளையாக இவர்கள் "ஒரத்தநாடு, ராமநாடு" போன்ற ஊர்களின் பெயர்களில் நாடு என்று இருப்பதால் தனிநாடு என்று எண்ணவில்லை.
😀